2 புது படங்களில் ரஜினி


2 புது படங்களில் ரஜினி
x
தினத்தந்தி 10 Sep 2021 7:12 PM GMT (Updated: 2021-09-11T00:42:01+05:30)

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் மேலும் 2 படங்களில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டதால் மேலும் 2 படங்களில் நடிப்பதை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. அண்ணாத்த தீபாவளி பண்டிகையில் வெளியாகிறது.

ரஜினி கையில் அரிவாளுடன் இருக்கும் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்து கதையம்சத்தில் தயாராகி உள்ளது. சிவா இயக்கும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர்.

அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமான தேசிங்கு பெரியசாமி டைரக்டு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு 169-வது படம்.

இந்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170-வது படத்தை தனுஷ் டைரக்டு செய்ய இருப்பதாகவும் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. தனுஷ் ஏற்கனவே ராஜ்கிரண் நடித்த ப. பாண்டி படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story