காதல் திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கர்ப்பம்


காதல் திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் கர்ப்பம்
x
தினத்தந்தி 10 Sep 2021 8:36 PM GMT (Updated: 2021-09-11T02:06:02+05:30)

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் (வயது 31). ஆஸ்கார் விருது பெற்ற இவர், 2010-ம் ஆண்டு முதலில் ‘எக்ஸ்-மென்’ படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நடிகர் நிக்கோலஸ் ஹவுல்ட்டை காதலித்தார்.

வாஷிங்டன்,

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் (வயது 31). ஆஸ்கார் விருது பெற்ற இவர், 2010-ம் ஆண்டு முதலில் ‘எக்ஸ்-மென்’ படப்பிடிப்பில் தன்னுடன் நடித்த நடிகர் நிக்கோலஸ் ஹவுல்ட்டை காதலித்தார். ஆனால் இந்த காதல் முறிந்து போனது. 2016-ல் இவர் பட இயக்குனர் டேரன் அரோனோப்ஸ்கையை காதலித்தார். இந்தக் காதலும் கைகூடவில்லை.

2018-ம் ஆண்டு ஆர்ட் காலரி இயக்குனரான குக் மரோனியை காதலிக்கத் தொடங்கினார். இந்தக் காதல் கனிந்தது. 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியூபோர்ட்டில் இவர்களது திருமணம் நடந்தது. இப்போது திருமண வாழ்வின் பரிசாக ஜெனிபர் லாரன்ஸ் கர்ப்பமாக உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

2015, 2016 ஆண்டுகளில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர்தான். அந்த ஆண்டுகளில் முறையே 52 மில்லியன் டாலர் (சுமார் ரூ.364 கோடி), 46 மில்லியன் டாலர் (சுமார் ரூ.322 கோடி) சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story