சினிமா செய்திகள்

பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன், அதர்வா - ஜோடி கீர்த்தி சுரேஷ் + "||" + The protagonist of the new film directed by Bala, Adarva couple Keerthi Suresh

பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன், அதர்வா - ஜோடி கீர்த்தி சுரேஷ்

பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன், அதர்வா - ஜோடி கீர்த்தி சுரேஷ்
பாலா இயக்கும் புதிய படத்தில் கதாநாயனாக அதர்வா நடிக்கிறார். அவருக்கு ஜோடி கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இதுவரை தயாரித்த படங்களில், கதைநாயகியாக ஜோதிகா நடித்து வந்தார். ‘தம்பி’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்தார். அவருக்கு அக்காவாக ஜோதிகா நடித்தார். இதுவரை அந்த பட நிறுவனம் வெளி நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவில்லை.

முதன்முதலாக 2டி நிறுவனம் வெளி நடிகர்களை வைத்து படம் தயாரிக்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.

பாலா டைரக்டு செய்கிறார். பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. சில வருட இடைவெளிக்குப்பின் பாலா டைரக்டு செய்யும் படம் என்பதால், தமிழ் பட உலகில் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பிரபல நடிகருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
2. பிரபல நடிகரின் முகத்தில் அடித்த கீர்த்தி சுரேஷ்
தெலுங்கு பட உலகின் பிரபல நடிகரின் முகத்தில் அடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டார்.
3. அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
நடிகர் அதர்வா நடித்துள்ள 'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
4. கவர்ச்சியாக நடிக்க எல்லை உண்டு - கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தேகத்தை காட்டி கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பேசியுள்ளார்.
5. கவர்ச்சியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுப்பு
தேகத்தை காட்டி கவர்ச்சியாக நடிக்கும் கதாபாத்திரங்களில் நான் நடிப்பது இல்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறினார்.