சினிமா செய்திகள்

சுந்தர் சி. டைரக்டு செய்த ‘அரண்மனை - 3’ படத்தை தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு + "||" + Sundar c. Arrangements have been made to release the movie 'Palace - 3' in theaters

சுந்தர் சி. டைரக்டு செய்த ‘அரண்மனை - 3’ படத்தை தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு

சுந்தர் சி. டைரக்டு செய்த ‘அரண்மனை - 3’ படத்தை தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு
‘அரண்மனை - 3’ படத்தை தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று டைரக்டர் சுந்தர் சி. தெரிவித்தார்.
கொரோனா மற்றும் ஊரடங்கு சட்டம் காரணமாக சினிமா தியேட்டர்கள் அனைத்தும் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்ததால், திரைக்கு வருவதற்காக நிறைய படங்கள், நீண்ட வரிசையில் உள்ளன. அந்த படங்களில், ‘அரண்மனை 3’ படமும் இடம் பெற்றுள்ளது.

இதில் ஆர்யா, ராஷிகன்னா, சுந்தர் சி, வின்சென்ட் அசோகன், விவேக், யோகி பாபு, மனோபாலா, சம்பத், மதுசூதன், வேலராமமூர்த்தி, விச்சு, கோலப்பள்ளி லீலா, நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் உச்சக்கட்ட காட்சி மட்டும் ₹1½ கோடி செலவில் படமாக்கப்பட்டிருப்பதாக டைரக்டர் சுந்தர் சி. தெரிவித்தார்.

அவர் கூறும்போது, உச்சக்கட்ட காட்சியில் 200 பேர் பங்கேற்றனர். 16 நாட்கள் இரவு, பகலாக படப்பிடிப்பு நடத்தினோம். படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.