ஏழுமலையானாக நடிக்க விரதம் இருந்த நடிகர்


ஏழுமலையானாக நடிக்க விரதம் இருந்த நடிகர்
x
தினத்தந்தி 11 Sep 2021 2:55 PM GMT (Updated: 2021-09-11T20:25:18+05:30)

திருப்பதி ஏழுமலையானின் புராண வரலாறு படத்தில் ஏழுமலையானாக நடிக்க ஆர்யன் ஷாம் விரதம் இருந்து அந்த வேடங்களில் நடித்து இருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையானின் புராண வரலாறு, ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. சீனிவாசப் பெருமாள், எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார்? என்பதை விளக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சீனிவாசப் பெருமாள், வெங்கடாஜலபதி, மகாவிஷ்ணு ஆகிய வேடங்களில், ஆர்யன் ஷாம் நடித்து இருக்கிறார். இவர் விரதம் இருந்து அந்த வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இதே படத்தில் மகாலட்சுமியாக அதிதி, பத்மாவதியாக சந்தியா நடித்துள்ளனர். ஞானம் பாலசுப்பிரமணியம் டைரக்டு செய்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

Next Story