சினிமா செய்திகள்

‘இடியட்’ படத்தில் ஜனரஞ்சகமான பேயாக நிக்கி கல்ராணி + "||" + Nikki Caulfield as the popular ghost in the movie 'Idiot'

‘இடியட்’ படத்தில் ஜனரஞ்சகமான பேயாக நிக்கி கல்ராணி

‘இடியட்’ படத்தில் ஜனரஞ்சகமான பேயாக நிக்கி கல்ராணி
‘இடியட்’ படத்தில் ஜனரஞ்சகமான பேயாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
நிக்கி கல்ராணி, ‘டார்லிங்’ என்ற பேய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில், அவர் பேய் வேடத்தில் நடித்தார். ‘இடியட்’ என்ற புதிய படத்தில், அவர் மீண்டும் பேயாக நடித்து இருக்கிறார். இந்தப் படத்தை ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்கிய ராம்பாலா டைரக்டு செய்துள்ளார். ‘இடியட்’ படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

‘‘எல்லோரும் எப்போதாவது ஒரு முறை முட்டாள்தனமாக நடந்துகொள்வது இயல்பு. அப்படி நடந்து கொள்பவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான், ‘இடியட்’.

இதில் நிக்கி கல்ராணி ஜனரஞ்சகமான பேயாக நடிக்கிறார். கதாநாயகன், சிவா. இவர்களுடன் ஆனந்தராஜ், அக்‌ஷரா கவுடா, ஊர்வசி, ரவிமரியா, மயில்சாமி, சிங்கமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். தென்காசி, புதுச்சேரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. இது குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படமாக இருக்கும்’’.