சினிமா செய்திகள்

கூட்டுக்குடும்பத்தின் மேன்மையை விளக்கும் படம் + "||" + The film illustrates the superiority of the joint family

கூட்டுக்குடும்பத்தின் மேன்மையை விளக்கும் படம்

கூட்டுக்குடும்பத்தின் மேன்மையை விளக்கும் படம்
‘டக் ஜெகதீஸ்’ படம் கூட்டுக்குடும்பத்தின் மேன்மையை விளக்கும் என படத்தில் நடித்த அனுபவங்களை நானி பகிர்ந்து கொண்டார்.
‘நான் ஈ’ படத்தில் நடித்து பிரபலமான நானி, தற்போது ‘டக் ஜெகதீஸ்’ என்ற குடும்ப படத்தில் நடித்துள்ளார். அந்த படம் பல நாடுகளில் வெளியாகிறது. படத்தில் நடித்த அனுபவங்களை நானி பகிர்ந்து கொண்டார்.

‘‘இது ஒரு குடும்பப் படம். குடும்ப வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை கதை சித்தரிக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் மேன்மை, பாசம், மோதல்களை படம் விவரிக்கிறது. அதிரடி காட்சிகளும் படத்தில் உள்ளன. பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான குடும்பப்படம் பார்த்த திருப்தியை தரும்.

இந்தப் படம் படப்பிடிப்பில் இருந்தபோது பல சுவாரசியமான அனுபவங்கள் ஏற்பட்டன. ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற சிறந்த நடிகர் - நடிகைகள் பலர் படத்தில் உள்ளனர். உணர்ச்சிகரமான காட்சிகளை படமாக்கும்போது, ஒட்டுமொத்த படக்குழுவினரும் அழுது விட்டார்கள். இது நிச்சயம் வெற்றிகரமான படமாக இருக்கும்.’’