4 இளைஞர்களும், ஒரு பெண்ணும் நட்புடன் பழக முடியுமா?


4 இளைஞர்களும், ஒரு பெண்ணும் நட்புடன் பழக முடியுமா?
x
தினத்தந்தி 11 Sep 2021 3:47 PM GMT (Updated: 2021-09-11T21:17:13+05:30)

4 நண்பர்களுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயான நட்பை சொல்லும் படமாக ‘ப்ரெண்ட்ஷிப்’ உருவாகியிருக்கிறது.

‘சென்னையில் ஒருநாள்-2’, ‘அக்னிதேவ்’ ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜான் பால்ராஜ், சாம் சூர்யா ஆகிய இருவரும் தயாரித்து இயக்கியுள்ள புதிய படம், ‘ப்ரெண்ட்ஷிப்’. இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவர் தீவிர ரஜினி ரசிகராக வருவார்.

அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கிறார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவைக்கு சதீஷ் இருக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர்கள் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா சொல்கிறார்கள்:

‘‘படத்தின் பெயருக்கு ஏற்ப இந்தப் படம், நட்பை அடிப்படையாக கொண்ட கதைதான். கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்களுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையேயான நட்பை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.

4 இளைஞர்களும், ஒரு பெண்ணும் நட்புடன் பழக முடியுமா? என்பதை கதை சித்தரிக்கிறது. இந்தப் படம் வந்தபின், ஆண்-பெண் நட்புக்கே இன்னொரு முகம் கிடைக்கும். படத்தில் ஒரு கிரிக்கெட் போட்டியும் இருக்கிறது’’.

Next Story