இயக்குனர் ஷங்கர் மகளை வாழ்த்திய ரஜினிகாந்த்


இயக்குனர் ஷங்கர் மகளை வாழ்த்திய ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 12 Sep 2021 11:54 PM GMT (Updated: 2021-09-13T05:24:42+05:30)

ஜென்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் பட உலகில் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிதியின் கதாபாத்திரம் வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும் என்றும் இந்த படத்துக்காக அவர் நடிப்பு பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். அதிதி ஐதராபாத் சென்று தெலுங்கு முன்னணி இயக்குனர் ராஜமவுலியை சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிலையில் கதாநாயகியாக அறிமுகமாவதையொட்டி நடிகர் ரஜினிகாந்தை அதிதி நேரில் சந்தித்தார். அப்போது அதிதிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய படங்களை ஷங்கர் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story