சினிமா செய்திகள்

குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ் + "||" + UA certification for the ghost film produced by Khushbu

குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்

குஷ்பு தயாரித்த பேய் படத்துக்கு ‘யு ஏ' சான்றிதழ்
நடிகை குஷ்பு அரண்மனை 3 என்ற பேய் படத்தை தயாரித்து உள்ளார். இது ஏற்கனவே வெளியாகி வசூல் குவித்த அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக தயாராகி உள்ளது.
இதில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷிகன்னா, விவேக், யோகிபாபு, மனோபாலா, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். சுந்தர்.சி இயக்கி உள்ளார்.இதன் படப்பிடிப்பை கடந்த வருடமே முடித்து கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில் அரண்மனை 3 படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தை பார்த்து விட்டு ‘யு ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இதனை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பதுடன் குடும்பம், நகைச்சுவை, பொழுதுபோக்கு, ரகளையோடு படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளார். மறைந்த நடிகர் விவேக் முழுவதுமாக நடித்து முடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெற்றி பெற குஷ்புவுக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சின்னத்தம்பி 2-ம் பாகம் எடுக்க குஷ்பு விருப்பம்
நடிகர் பிரபுவும். குஷ்புவும் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.
2. கட்சி மாறுவதாக விமர்சனம் நடிகை குஷ்பு கோபம்
நடிகை குஷ்பு ஏற்கனவே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது பா.ஜனதா கட்சியில் இணைந்து செயலாற்றி வருகிறார்.
3. ‘ருத்ரதாண்டவம்’ படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ்
‘‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துவது பற்றி பேசும் படமாக ‘ருத்ரதாண்டவம்’ தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்’’ என்கிறார், படத்தின் டைரக்டர் மோகன் ஜி.