சினிமா செய்திகள்

ரஜினியின் ‘அண்ணாத்த' பாடல் வெளியாகிறது + "||" + Rajini's Annaatthe film song is released

ரஜினியின் ‘அண்ணாத்த' பாடல் வெளியாகிறது

ரஜினியின் ‘அண்ணாத்த' பாடல் வெளியாகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் டப்பிங் பேசி முடித்துள்ளனர்.
தற்போது கிராபிக்ஸ், இசைகோர்ப்பு வேலைகள் நடக்கின்றன. தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி உள்ளார். இது அவர் பாடிய கடைசி பாடல் என்பதால் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளான வருகிற 25-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் இது அறிமுக பாடலாக இடம் பெற்று உள்ளது. ஏற்கனவே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தில் வரும் ரஜினிகாந்த் தோற்றங்களை படக்குழு வெளியிட்டு இருந்தது. ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் இருப்பது போன்றும், மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் ஆவேசமாக செல்வது போன்றும் தோற்றங்கள் இருந்தன. அண்ணாத்த படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 கதாநாயகிகள் உள்ளனர். சிவா இயக்கி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கனவில் கூட நினைக்கவில்லை... எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பி குறித்து உருக்கமாக பதிவு செய்து இருக்கிறார்.
2. ரஜினி படத்தில் நடித்த ஷெரின்
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ஷெரின், ரஜினி படத்தில் நடித்துள்ளார்.
3. நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்
அண்ணாத்த படத்தின் போஸ்டர் கொண்டாட்டத்தில் ஆட்டை வெட்டும் வீடியோ ஒன்றை வைரலாகி வருவதால் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
4. புதிய படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே?
புதிய படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே?.
5. இன்னும் 2 வாரங்களில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு முடிகிறது
ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனாவால் தாமதம் ஆனது.