சினிமா செய்திகள்

டொவினோ தாமஸ் நடித்த ‘கடைசி நொடிகள்’ + "||" + Tovino thomas acting kadaisi nodigal

டொவினோ தாமஸ் நடித்த ‘கடைசி நொடிகள்’

டொவினோ தாமஸ் நடித்த ‘கடைசி நொடிகள்’
நகரில் வரிசையாக பெண் குழந்தைகள் கொலை செய்யப்படுகிறார்கள். கொலைகாரனை கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கிறது. அதில் தடயவியல் அதிகாரியும் ஒருவர். கொலைகளும், கொலை நடக்கும் விதமும் ஒரேமாதிரி இருப்பதால், கொலைகாரன் ஒரே ஆள்தான் என்பதை கண்டுபிடிக்கிறார், அந்த அதிகாரி.
அதை போலீஸ் ஏற்க மறுக்கிறது. தடயவியல் அதிகாரி எப்படி உயர் போலீஸ் அதிகாரிகளை நம்பவைக்கிறார்? கொலைகாரனை எப்படி பிடிக்கிறார்? என்பதே ‘கடைசி நொடிகள்’ படத்தின் கதை என்கிறார்கள், படத்தின் டைரக்டர்கள் அனஸ்கான்-அகில்பால். வசனம் எழுதியிருப்பவர், ஏ.ஆர்.கே.ராஜராஜா. தயாரிப்பு: கோபிநாத். டொவினோ தாமஸ், மம்தா மோகன்தாஸ், மோகன்சர்மா, பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.