சினிமா செய்திகள்

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம் + "||" + Vijay's caste is Tamil, reveal SA Chandrasekar

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்

விஜய்யின் சாதி சான்றிதழ் ரகசியம்
சாதி வெறிக்கு எதிராக உருவாகியுள்ள புதிய படம், ‘சாயம்.’ இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
‘‘மாணவர்கள் இடையே சாதி சாயம் பூசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது, விண்ணப்பத்தில் சாதி, மதம் என்கிற இடத்தில், தமிழன் என்று குறிப்பிட்டேன்.முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ‘பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன்’ என்று கூறியதும், அமைதியாக ஏற்றுக்கொண்டார்கள். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில், சாதி என்கிற இடத்தில், தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.சாதிக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால், இன்னும் 20 வருடங்களில் சாதியே காணாமல் போய்விடும்.’’

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

‘சாயம்’ படத்தில் கதாநாயகன் அபி சரவணன், தன் பெயரை விஜய் விஷ்வா என்று மாற்றிக் கொண்டார். கதாநாயகி, சைனி. ஒய்ட் லேம்ப் புரொடக்‌ஷன் தயாரிக்க, அந்தோணிசாமி டைரக்டு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு புதிய ஹேஷ்டேக் டிரெண்ட்
பீஸ்ட் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு டுவிட்டரில் "அப்டேட் கொடுங்க நெல்சன்" என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
2. விஜய் மக்கள் இயக்க கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்
விஜய் மக்கள் இயக்க கட்சி கூட்டங்களில் எனது பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு வருகிற 27-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
3. விஜய் படத்தில் புதுமுக நடிகை
விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் கேரளாவை சேர்ந்த அபர்ணா தாஸ் தமிழில் அறிமுகமாகிறார்.
4. விஜய்யுடன் இந்தி நடிகை நடித்த பாடல் காட்சி
விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தொடங்கியது. விஜய்யுடன் இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
5. 66-வது படத்தில் விஜய் சம்பளம் ரூ.100 கோடி?
விஜய் இப்போது நெல்சன் டைரக்டு செய்யும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு `பீஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள் ளது. இது அவர் நடிக்கும் 65-வது படம்.