சினிமா செய்திகள்

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார், பிரியா பவானி சங்கர் + "||" + Paired with Jayam Ravi, Priya Bhavani Shankar

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார், பிரியா பவானி சங்கர்

ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்ந்தார், பிரியா பவானி சங்கர்
ஜெயம் ரவி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் நடிக்க இருக்கும் புதிய பட அறிவிப்பை வெளியிட்டார். இந்தப் படத்தை டைரக்டர் கல்யாண் இயக்குகிறார். இவர், ஜெயம் ரவி நடித்த ‘பூலோகம்’ படத்தை இயக்கியவர்.
இது, ஜெயம் ரவி நடிக்கும் 28-வது படம். இவருடன் ஜோடி சேர்ந்தவர், பிரியா பவானி சங்கர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தில், அவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றிக்கொண்டார்.