சினிமா செய்திகள்

'தற்கொலை தீர்வல்ல... தேர்வு, உயிரை விட பெரிதல்ல' - நடிகர் சூர்யா உருக்கம்! + "||" + Suicide is not the solution ...Choice is not bigger than life Actor Surya

'தற்கொலை தீர்வல்ல... தேர்வு, உயிரை விட பெரிதல்ல' - நடிகர் சூர்யா உருக்கம்!

'தற்கொலை தீர்வல்ல... தேர்வு, உயிரை விட பெரிதல்ல' - நடிகர் சூர்யா உருக்கம்!
தற்கொலை செய்து கொள்வது நெருக்கமானவர்களுக்கு நீங்கள் வாழ்நாள் முழுவதும் கொடுக்கும் தண்டனை - என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.

சென்னை

தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது உரையை தொடங்குகிறார். 

மாணவிகள் மாணவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு போன வாரம் அல்லது போன மாசம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போ இருக்கிறதா. யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும். இல்லாமல் கூட போயிருக்கும்.

ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா அம்மா இல்ல ஒரு பெரியவங்க, நண்பர்கள் ஆசிரியர்கள் யாரிடமாவது மனதை விட்டு பேசுங்கள்.

எல்லாவற்றையும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்தில் குறைய வேண்டிய விஷயங்கள். தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றும் முடிவு செய்வதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புபவர்களுக்கு, அப்பா அம்மா குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை. மறந்துவிடாதீர்கள்.
 
நான் நிறைய தேர்வுகளில் பெயிலாகி இருக்கிறேன். குறைவான மார்க் வாங்கி இருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும். மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிந்து கொள்ளவும் நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம். நம்பிக்கையா.. தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் ஜெயிக்கலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… என்று கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
2. நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
3. மகள் காதல் திருமணம் செய்ததால் தாய், தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் விரக்தி அடைந்த தாய், தந்தை தற்கொலை செய்துகொண்டனர்.
4. உருக்கமான வீடியோ வெளியிட்டுவிட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை
சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க. நிர்வாகி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு மனைவியும், அவரது குடும்பத்தினருமே காரணம் என உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.
5. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் தேவராஜ் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.