சினிமா செய்திகள்

இந்தோனேஷிய மொழியில் மோகன்லாலின் திரிஷ்யம் ரீமேக் + "||" + Mohanlal-Jeethu Joseph’s ‘Drishyam’ to get an Indonesian remake!

இந்தோனேஷிய மொழியில் மோகன்லாலின் திரிஷ்யம் ரீமேக்

இந்தோனேஷிய மொழியில் மோகன்லாலின் திரிஷ்யம் ரீமேக்
மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து 2013-ல் திரைக்கு வந்த திரிஷ்யம் படம் பெரிய வெற்றி பெற்று அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இதில் எஸ்தர், ஆஷா சரத், சித்திக் உள்பட மேலும் பலர் நடித்து இருந்தனர். ஜீத்து ஜோசப் இயக்கினார்.
பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண் போலீஸ் அதிகாரியின் மகனை கொலை செய்த இளம் பெண்ணை சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாக்க போராடும் ஒரு தந்தையின் கதையே இந்த படம். திரிஷ்யம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேசும், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்து இருந்தனர். அதோடு சீன மொழியிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூல் குவித்தது.

இந்த நிலையில் திரிஷ்யம் படம் தற்போது இந்தோனேஷிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மலையாள படம் இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆவது இதுவே முதல் முறையாகும்.