தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை ஜெர்மனி படவிழாவில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’


தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமை ஜெர்மனி படவிழாவில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’
x
தினத்தந்தி 18 Sep 2021 10:40 PM GMT (Updated: 18 Sep 2021 10:40 PM GMT)

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு பெருமையை தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஜெர்மனி படவிழாவில் சமீபத்தில் சேர்க்க இருக்கிறது.

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்தை மாரி செல்வராஜ் டைரக்டு செய்திருந்தார். எஸ்.தாணு தயாரித்தார். படம் உலகம் முழுவதும் தியேட்டர்களில் வசூல் சாதனை செய்தது. ஓ.டி.டி. தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் வென்றது.

சர்வதேச அளவில் தமிழ் பட உலகுக்கு பெருமை சேர்த்த ‘கர்ணன்’ சமீபத்தில் மேலும் ஒரு பெருமை சேர்க்க இருக்கிறது. ஜெர்மனியின் பிராங்பெர்ட் நகரில் அக்டோபர் 12, 13, 14 தேதிகளில், சர்வதேச படவிழா நடக்கிறது.

அதில் திரையிடுவதற்காக, ‘கர்ணன்’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Next Story