சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு ‘கோஸ்ட் ரைடர்’ நடிகர் விலகலா? + "||" + Will 'Ghost Rider' actor leave cinema?

சினிமாவை விட்டு ‘கோஸ்ட் ரைடர்’ நடிகர் விலகலா?

சினிமாவை விட்டு ‘கோஸ்ட் ரைடர்’ நடிகர் விலகலா?
பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் சினிமாவை விட்டு விலகி ஓய்வு எடுக்கப்போவதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
நிக்கோலஸ் கேஜ், அதிக பேய் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கோஸ்ட் ரைடர் படம் 2007-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் மண்டை ஓட்டு தலையுடன் நெருப்பு எரிந்தபடி பேய்களுடன் அவர் மோதும் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்தன. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வந்தது. ரேசிங் வித் தி மூன், காட்டன் கிளம், நேஷனல் டிரெஷர், டைம் டு கில் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து இருக்கிறார்.

57 வயதாகும் நிக்கோலஸ் கேஜுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவர் சினிமாவை விட்டு விலகப்போவதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதற்கு நிக்கோலஸ் கேஜ் விளக்கம் அளித்து கூறும்போது, “நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக தகவல் பரவி உள்ளது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். வயதும் ஆகவில்லை. எனவே என்னால் முடியும் வரை சினிமாவில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன். சினிமாவில் நடிப்பதுதான் எனக்கு உற்சாகத்தை தருகிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சினிமா துறையில் இனவெறி கருப்பான நடிகையை ஒதுக்குகின்றனர்
சினிமா துறையில் இனவெறி கருப்பான நடிகையை ஒதுக்குகின்றனர் -நவாசுதீன் சித்திக்.
2. ஜோதிகா பகிர்ந்த சினிமா அனுபவங்கள்
நடிகை ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.
3. சோனி ஹோம் சினிமா சிஸ்டம்
வீட்டு உபயோக மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் வீட்டிலேயே சினிமா பார்த்து ரசிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.
4. சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
சினிமா வாழ்க்கை போராட்டமாக உள்ளது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
5. தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்
தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்.