தாஜ்மகாலில் அஜித் குமார்


தாஜ்மகாலில் அஜித் குமார்
x
தினத்தந்தி 20 Sep 2021 12:01 PM GMT (Updated: 20 Sep 2021 12:01 PM GMT)

நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சென்று வந்தார்.

சமீபத்தில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷியா சென்றபோது அங்கும் பைக்கில் பயணம் செய்து சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்த்தார். இந்த நிலையில் அஜித்குமார் தற்போது தாஜ்மகாலுக்கு சென்று சுற்றிப் பார்த்துள்ளார். தாஜ்மகால் முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்து புகைப்படமும் எடுத்தார். தாஜ்மகாலில் அஜித்குமாரை பார்த்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள சூழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

அஜித்தின் வலிமை படம் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும் வெளியாவதால் போட்டியை தவிர்க்க டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடிப்பார் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story