சினிமா செய்திகள்

ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம் + "||" + Mumbai: Police found 119 porn videos on businessman Raj Kundra's mobile, laptop and hardrive disk

ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்

ஷில்பா ஷெட்டியின் கணவர் மொபைலில் 119 ஆபாச வீடியோக்கள் ; ரூ.9 கோடிக்கு விற்க திட்டம்
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் செல்போனிலிருந்து 119 ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த   குந்த்ராவுக்கு  2 மாதம் கழித்து நேற்று  மும்பை ஐகோர்ட்  ஜாமீன் வழங்கியது.

ஆபாச வழக்கில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளன என கூறி இருந்தார்.

தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும் ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஷெர்லின் சோப்ரா மீது ராஜ் குந்த்ரா- ஷில்பா ஷெட்டி ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு
ஷெர்லின் சோப்ரா அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்து உள்ளார்.
2. பாலியல் வன்கொடுமை : நடிகை ஷில்பா ஷெட்டி -ராஜ் குந்த்ரா மீது நடிகை ஷெர்லின் சோப்ரா மீண்டும் புகார்
ஷெர்லின் சோப்ரா ஏப்ரல் 20, 2021 அன்று ஜுஹு காவல் நிலையத்தில் ஆஜராகி ராஜ் குந்த்ராவுக்கு எதிரான தனது வழக்கை வாபஸ் பெற்று இருந்தார்.
3. 2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவை கைது செய்ய இடைக்கால தடை: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
2020-ம் ஆண்டு ஆபாச பட வழக்கில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய ஐகோர்ட்டு இடை கால தடை விதித்துள்ளது.
4. கணவர் மீதான ஆபாச பட வழக்கு: கருத்து சொல்வதை தவிர்க்கிறேன் -ஷில்பா ஷெட்டி முதல் அறிக்கை
ஷில்பா ஷெட்டி தன்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டதாக ஊடகங்கள் மீதுமும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. ஆபாச பட விவகாரம்: ஆண்கள் தவறுகளுக்கு பெண்களைக் குறை சொல்வதா...? ஷகிலா பயோபிக் நடிகை கோபம்
இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ஹன்சல் மேத்தா, ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.