சினிமா செய்திகள்

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் 2-ம் பாகம் + "||" + Vijay Sethupathi's Tughlaq Darbar Part 2

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் 2-ம் பாகம்

விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் 2-ம் பாகம்
ஓ.டி.டி. தளத்தில் வெளியான துக்ளக் தர்பார் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளதாக இயக்குனர் பிரசாத் தீனதயாளன் அறிவித்து உள்ளார்.
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்சின் காஞ்சனா, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் 2-ம் பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்களாக வந்தது. சுந்தர்.சியின் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது 3-ம் பாகமும் தயாராகி உள்ளது. ஆர்யாவின் டெடி, விஜய்சேதுபதியின் சூதுகவ்வும் உள்ளிட்ட மேலும் சில படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராக உள்ளன.

இந்தநிலையில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ், ராஷிகன்னா, மஞ்சிமா மோகன், கருணாகரன் ஆகியோர் நடித்து சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான துக்ளக் தர்பார் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க உள்ளதாக இயக்குனர் பிரசாத் தீனதயாளன் அறிவித்து உள்ளார். துக்ளக் தர்பார் அரசியல் கதையம்சம் உள்ள படமாக வந்துள்ளது.