தலைநகரம்' 2 ' படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடக்கம்


தலைநகரம் 2  படப்பிடிப்பு  பூஜையுடன் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 23 Sep 2021 11:00 AM GMT (Updated: 2021-09-23T16:30:36+05:30)

சுந்தர்சி நடிக்கும் தலைநகரம் '2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் தொடங்கியது .

சென்னை 

சுந்தர்சி நடிக்கும் தலை நகரம்' 2 'படத்தின்  படப்பிடிப்பு  சென்னையில் இன்று   பூஜையுடன் தொடங்கியது .

2006 ம் ஆண்டு  சுந்தர்.சி நடிப்பில் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற  படம் தலைநகரம் .இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில்  வடிவேலு, பிரகாஷ் ராஜ், ஜோதிர்மயி, மயில்சாமி உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர் . 

இந்த  நிலையில் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தை இன்று சென்னையில் படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர் .இப்படத்தை வி. இசட் துரை  இயக்குகிறார்  .
 
 தலைநகரம் படத்தில் இடம்  பெற்றிருந்த வடிவேலு  காமெடி இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது . எனவே தலைநகரம் இரண்டாம் பாகத்தில்   வடிவேலு நடிப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இது குறித்து படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை .


Next Story