சினிமா செய்திகள்

கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி + "||" + Young actress killed after car overturns in river

கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி

கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி
கார் ஆற்றில் கவிழ்ந்து காதலருடன் இளம் நடிகை பலி.
பிரபல இளம் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் மராத்தி மொழி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சுபம் தட்கே என்பவரை ஐஸ்வரி தேஷ்பாண்டே காதலித்தார். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர். விரைவில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடுகள் நடந்தன.


இந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் சில தினங்களுக்கு முன்பு காரில் கோவா சென்றனர். அங்கு பல இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் காரில் மும்பை திரும்பினார்கள். கோவா பர்தேஷ் தாலுகாவில் உள்ள ஹட்பேட் என்ற கிராமத்தின் அருகே கார் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சிறிய ஆற்றுக்குள் கவிழ்ந்தது. கார் கதவு பூட்டி இருந்ததால் அதை திறந்து இருவராலும் வெளியே வரமுடியவில்லை. இந்த விபத்தில் நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். காதலர் சுபர் தட்கேவும் பலியானார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் உடல்களை மீட்டனர்.

இந்த சம்பவம் மராத்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள் பலரும் ஐஸ்வரி தேஷ்பாண்டே மறைவுக்கு சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்பு: இலங்கை கடற்படை உறுதி
கப்பலால் மோதி படகு மூழ்கடித்த சம்பவத்தில், கடலில் மூழ்கி பலியான தமிழக மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
2. போலீஸ் காவலில் விசாரணை கைதி பலி: குடும்பத்தினரை நேரில் சந்தித்தார் பிரியங்கா காந்தி
உ.பி.யில் போலீஸ் காவலில் விசாரணை கைதி பலியான சம்பவத்தில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.
3. நடிகை தற்கொலை... காதலனுக்கு தொடர்பா? - பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளிவந்த உண்மை
நடிகை சவுஜன்யா, கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
4. பிரபல நடிகை திடீர் மரணம்
மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரிலும், திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான உமா மகேஸ்வரி குடும்பத்துடன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசித்து வந்தார்.
5. கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி
கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டன.