சினிமா செய்திகள்

பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல் + "||" + The story behind the song is interesting information told by Ilayaraja

பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்

பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்
பாடல் உருவான கதை இளையராஜா சொன்ன சுவாரசிய தகவல்.
சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்த பாடல் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வைரலானது.


தற்போது யூடியூப் தளத்தில் 1.2 கோடி பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற பேர் வச்சாலும் பாடலை உருவாக்கியது பற்றி இளையராஜா வீடியோவில் சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவும், கமல்ஹாசனும் பேர் வச்சாலும் பாடல் உருவாக்கியபோது ஸ்டூடியோவுக்கு வந்திருந்தார்கள். டியூன் போட்டு முடித்து கவிஞர் வாலியை அழைத்து டியூனை பாடிக்காட்டினேன். அதற்கு அவர் இப்படி பாடினால், நான் எப்படி பாட்டு எழுத முடியும் என்றார். உடனே நான் துப்பார்க்குத் துப்பாய என்று தொடங்கும் திருக்குறளை அந்த டியூனுக்கு ஏற்றபடி பாடி காட்டினேன். அந்த குறளில் இருக்கும் அழுத்தம் பாடலில் இருக்க வேண்டும் என்று கூறினேன். இப்படித்தான் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் உருவானது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு விவகாரத்தில் கேரள அரசின் ஆட்சேபனையை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2. திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்
திருப்பதிபோல் தரிசனத்துக்கு நேரம் ஒதுக்கீடு: திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பக்தர்களுக்கான வசதிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்.
3. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மகளிர் உதவும் சங்கத்தில் சேரலாம் கலெக்டர் தகவல்.
4. மத்திய அரசு அனுமதி அளித்தவுடன்: 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி அமைச்சர் தகவல்
மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் 2 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
5. 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ கோவில் தங்க நகைகள் உருக்கப்பட்டுள்ளன ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தமிழக கோவில்களில் 1977-ம் ஆண்டு முதல் 500 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு தங்கக்கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியுள்ளது.