ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் பட உலகம்


ஹாலிவுட் ஸ்டைலில் தமிழ் பட உலகம்
x
தினத்தந்தி 24 Sep 2021 3:03 PM GMT (Updated: 2021-09-24T20:33:07+05:30)

ஹாலிவுட் படங்களில் முன்னணி இசை, பின்னணி இசை என்று, ஒரு படத்தில் 2 இசையமைப்பாளர்கள் இருப்பார்கள். அந்த ஸ்டைல், இப்போது தமிழ் பட உலகிலும் மெதுவாக பரவ ஆரம்பித்து இருக்கிறது.

திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘கோடியில் ஒருவன்’ படத்தில், இந்த முறை கையாளப்பட்டுள்ளது. பாடல்களுக்கு ஒரு இசையமைப்பாளரும், பின்னணி இசைக்கு வேறு ஒரு இசையமைப்பாளரும் பணியாற்றி இருக்கிறார்கள். இதுபற்றி அந்த படத்துக்கு பின்னணி இசையமைத்த ஹரீஸ் அர்ஜூன் கூறியதாவது:-

‘‘அடிப்படையில், நான் ஒரு ‘கீ போர்டு’ பிளேயர். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி என 4 மொழி படங்களில் வேலை செய்து இருக்கிறேன். என் தந்தையும், மூத்த சகோதரரும் இசைத் துறையைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் வழியில் நானும் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன்.

‘கோடியில் ஒருவன்’ படத்துக்கு பின்னணி இசையமைக்கும் வாய்ப்பை, விஜய் ஆண்டனிதான் கொடுத்தார். இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 32 நாட்கள் வேலை செய்தேன். உதாரணத்துக்கு இந்தப் படத்தின் வில்லன் வரும் காட்சிகளில், நாதஸ்வர இசையை பின்னணியாக வைத்துள்ளேன். படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.’’

Next Story