வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா


வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா
x
தினத்தந்தி 27 Sep 2021 2:00 PM GMT (Updated: 27 Sep 2021 2:00 PM GMT)

அஜித்குமார், சுருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ல் தீபாவளி பண்டிகையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம்.

அஜித்குமார், சுருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ல் தீபாவளி பண்டிகையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம். அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து தயாராகி இருந்தது. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. அஜித்குமார் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. பின்னர் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. இதில் தங்கை லட்சுமிமேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் தேர்வானார். சுருதிஹாசன் கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இளம் நடிகைகள் பலரும் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் தமன்னா தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.


Next Story