“நண்பர்களாக மாறிய நடிகர்கள்” படவிழாவில் நடிகை நெகிழ்ச்சி


“நண்பர்களாக மாறிய நடிகர்கள்” படவிழாவில் நடிகை நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 27 Sep 2021 2:15 PM GMT (Updated: 2021-09-27T19:45:44+05:30)

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி, ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இதையடுத்து அவர் டைரக்டராக மீண்டும் களம் இறங்கியிருக்கும் படம், ‘சிவகுமாரின் சபதம்.’ இந்த படத்தை டி.ஜி.தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தை பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் பேசும்போது, “இந்த படத்தின் இரண்டாம் பகுதி என்னை மிகவும் பாதித்தது. ‘மூன்றாம் பிறை’ படத்துக்கு பிறகு இந்த படம்தான் என்னை மிகவும் பாதித்தது” என்றார்.

“இது நெசவாளர்களை பற்றிய கதை. படத்தின் பெரும்பகுதி காட்சிகளை காஞ்சீபுரத்தில் படமாக்கி இருக்கிறோம். இந்த படத்தில் தமிழ் தெரிந்த கதாநாயகி நடித்து இருக்கிறார். அவர் புதுச்சேரி தமிழ் பெண். ஒரு மாதம் நடந்த ஒத்திகையில் கலந்து கொண்டார். அது இப்போது அவர் முகத்தில் தெரிகிறது” என்று டைரக்டர் ஆதி சொன்னார்.

கதாநாயகி மாதுரி ஜெயின் பேசும்போது, “படப்பிடிப்பின்போது ஒரு குடும்பத்துடன் பழகியது போல் உணர்ந்தேன். எல்லா நடிகர்களும் நண்பர்களாக மாறிவிட்டார்கள். இது, அனைவரையும் சிரிக்க வைக்கும் படமாக இருக்கும்” என்றார்.

Next Story