சினிமா செய்திகள்

கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம் + "||" + Kapil Dev's Life Movie To Be Released At Christmas

கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம்

கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம்
கிறிஸ்துமசில் ரிலீசாகும் கபில்தேவ் வாழ்க்கை படம்.
கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், தோனி ஆகியோர் வாழ்க்கை சினிமா படங்களாக வெளிவந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கையை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகி உள்ளது.

கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்திய சம்பவங்களையும், இந்த படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இதில் கபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ளார்.


உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா மற்றும் கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், கிரிமானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்க் சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கபீர்கான் டைரக்டு செய்துள்ளார். 83 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் அறிவித்து உள்ளார். ‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் 83 திரைப்படம் உலக அளவில் புயலை கிளப்பப்போகிறது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். 83 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிகில் சின்ன படம்... நஷ்டம் - கே.ராஜன்
கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பிகில் சின்ன படம், நஷ்டம் அடைந்த படம் என்று கூறியிருக்கிறார்.
2. ஊர்வசியின் 700-வது படம்
தமிழில் 1983-ல் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஊர்வசி. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.
3. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் பிரபு தேவா படம்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பிரபுதேவாவின் புதிய படம் ஒன்று நேரடியாக ஓட்டி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
4. ஜப்பானிய மொழியில் வெளியாகும் கார்த்தியின் பிளாக்பஸ்டர் ஹிட் படம்
கார்த்தி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
5. முதல்முறையாக ஆகாய கங்கை பகுதியில் பிரபுதேவா படம்
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.