நாகேஷ் பெயரில் சாலை அரசுக்கு கமல் கோரிக்கை


நாகேஷ் பெயரில் சாலை அரசுக்கு கமல் கோரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2021 3:14 PM GMT (Updated: 28 Sep 2021 3:14 PM GMT)

நாகேஷ் பெயரில் சாலை அரசுக்கு கமல் கோரிக்கை.

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் நினைவு நாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி முத்திரையைப் பதித்த நாகேஷ் இந்திய சினிமாவின் இணையற்ற நடிகர்களுள் ஒருவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து தமிழர்களை மகிழ்வித்தவர். இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ், தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் அவரது நடிப்பு ஊடகங்களால் புகழப்பட்டது.

1958-ல் மனமுள்ள மறுதாரத்தில் அறிமுகமாகி 2008-ல் தசாவதாரம் வரை மிகச்சரியாக அரை நூற்றாண்டுகள் நீடித்தது அவரது கலைப்பயணம். வாழும் போதும், வாழ்ந்த பிறகும் புறக்கணிக்கப்பட்ட மகா கலைஞன். அவர் மறைந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் மீதான அரசின் புறக்கணிப்பு தொடர்வது ஒரு சககலைஞனாக எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த மகத்தான நடிகரின் கலைப்பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டுவதும், அவரது பெயரில் ஒரு விருதினைத் தோற்றுவிப்பதும், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்திற்குள் அவரது சிலையை அமைப்பதும் குறைந்தபட்ச அங்கீகாரங்களாக அமையும். கலைஞர்களைப் போற்றுவதும் நல்லரசின் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.''

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


Next Story