பிரபல நடிகை மரணம்


பிரபல நடிகை மரணம்
x
தினத்தந்தி 30 Sep 2021 10:53 AM GMT (Updated: 30 Sep 2021 10:53 AM GMT)

பிரபல மலையாள நடிகை ஸ்ரீலட்சுமி. இவர் பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.

பிரபல மலையாள நடிகை ஸ்ரீலட்சுமி. இவர் பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து இருக்கிறார். ஸ்ரீலட்சுமி நடன கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் உள்ள பல்வேறு சபாக்களில் நடனம் ஆடி வந்தார். சிறந்த நடன கலைஞருக்கான விருதும் பெற்றுள்ளார். கேரளாவில் வசித்து வந்த ஸ்ரீலட்சுமிக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி ஸ்ரீலட்சுமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 38. மரணம் அடைந்த ஸ்ரீலட்சுமிக்கு வினோத் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஸ்ரீலட்சுமி மறைவுக்கு மலையாள நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Next Story