தனுசின் புதிய படம்


தனுசின் புதிய படம்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:25 AM GMT (Updated: 2021-10-05T12:55:47+05:30)

சுந்தர்.சி இயக்கும் நகைச்சுவை கதையம்சம் உள்ள படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படம் கடந்த ஜூன் மாதம் ஓ.டி.டியில் வெளியானது. இந்தியில் அக்‌ஷய்குமாருடன் அந்த்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையும் ஓ.டி.டியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன. த கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். 

கார்த்திக் நரேன் இயக்கும் மாறன், மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன. மாறன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. 

மாரி செல்வராஜ், ராம்குமார், வெற்றி மாறன் ஆகியோரும் தனுஷ் படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் உள்ளனர். இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கும் நகைச்சுவை கதையம்சம் உள்ள படத்தில் தனுஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story