சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, சமந்தாவை விவாகரத்து செய்ய அமீர்கான் காரணமா? + "||" + Is Aamir Khan the reason for divorcing Telugu actor Nagashitanya and Samantha?

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, சமந்தாவை விவாகரத்து செய்ய அமீர்கான் காரணமா?

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா, சமந்தாவை விவாகரத்து செய்ய அமீர்கான் காரணமா?
சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் பிரிவதற்கு இந்தி நடிகர் அமீர்கான் காரணம் என்று நடிகை கங்கனா ரணாவத் மறைமுகமாக சாடி உள்ளார்.
அமீர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அமீர்கானுடன் இணைந்து லால்சிங் சத்தா என்ற இந்தி படத்தில் நாகைசைதன்யா நடித்து வருகிறார். 

அமீர்கானை சந்தித்த பிறகே நாகசைதன்யா விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எந்த விஷயத்திலும் தவறு என்பது ஆண் மீதுதான். நான் பழமைவாதியை போன்றும், பாரபட்சமாக பேசுவதாகவும் நினைக்கலாம். 

ஆனால் கடவுள் ஆண், பெண் இயல்பை அப்படித்தான் உருவாக்கி உள்ளார். பெண்களை ஆடை போல மாற்றி பிறகு அவர்களுக்கு நண்பர்களாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளும் ஆண்களிடம் இரக்கம் காட்டக்கூடாது. விவாகரத்து கலாசாரம் முன்பை விட அதிகமாக உயர்ந்து இருக்கிறது. சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த தென்னிந்திய நடிகர் அந்த பெண்ணை 10 வருடங்களுக்கு மேலாக காதலித்துள்ளார். 4 வருடங்களாக திருமணம் செய்து கொண்டும் வாழ்ந்துள்ளார். இந்த நடிகர் சமீபத்தில் இந்தியில் விவாகரத்து நிபுணராக பார்க்கப்படுகிற உச்ச நடிகரை சந்தித்துள்ளார். 

அந்த நடிகர் பல பெண்களின் வாழ்க்கையை பாழாக்கி விட்டு இப்போது பலருக்கு அறிவுரை சொல்பவராக மாறி இருக்கிறார். நான் யாரை சொல்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்கள் அமீர்கானை சொல்கிறீர்கள் என்பதும், அமீர்கானிடம் அறிவுரை பெற்றுத்தான் சமந்தாவை நாகசைதன்யா விவாகரத்து செய்துள்ளார் என்று நீங்கள் மறைமுகமாக சொல்லி இருப்பதையும் புரிந்து கொண்டோம் என்று பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் படத்தில் குத்தாட்டம் போடும் சமந்தா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. ‘நான் ஒரு போராளி’ -நடிகை சமந்தா
கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
3. அஜித் பட நடிகை மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. கணவரைபிரிந்ததால் மீண்டும் தீவிரமாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.