ஆர்யாவின் மகாமுனி 9 விருதுக்கு பரிந்துரை


ஆர்யாவின் மகாமுனி 9 விருதுக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 5 Oct 2021 9:33 AM GMT (Updated: 2021-10-05T15:03:12+05:30)

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்.

திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி இருந்தது. மகாமுனி படம் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்றுள்ளது. மகிமா நம்பியாருக்கு மேட்ரிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்தது. இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் மகாமுனி படம் 9 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. 

சிறந்த நடிகர் (ஆர்யா), சிறந்த நடிகை (இந்துஜா), சிறந்த துணை நடிகை (மகிமா நம்பியார்) மற்றும் சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த வெளிநாட்டு படம் உள்பட 9 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைத்து உள்ளனர். அனைவருக்கும் படத்தின் இயக்குனர் சாந்தகுமார் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். 

இங்கிலாந்தில் சர்வதேச திரைப்பட விழா அடுத்த மாதம் (நவம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.


Next Story