சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு பின் புதிய வாழ்க்கை பற்றி சமந்தா பதிவு + "||" + Samantha posts about new life after divorce

விவாகரத்துக்கு பின் புதிய வாழ்க்கை பற்றி சமந்தா பதிவு

விவாகரத்துக்கு பின் புதிய வாழ்க்கை பற்றி சமந்தா பதிவு
நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளார். இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர்.
நடிகை சமந்தா, கணவர் நாகசைதன்யாவை பிரிந்துள்ளார். இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர். இது பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகசைதன்யா ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு ரூ.200 கோடி கொடுக்க முன்வந்ததாகவும், அதை வாங்க சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. சமூக வலைத்தளத்தில் விவாகரத்துக்கு யார் காரணம்? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. திருமணத்துக்கு பிறகு சமந்தா சூப்பர் டீலக்ஸ் படத்தில் படுக்கை அறை காட்சியில் நெருக்கமாக நடித்து இருந்தார். பேமிலிமேன் 2 வெப் தொடரிலும் கவர்ச்சியாக வந்தார். இப்படி கவர்ச்சியாக சமந்தா நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும், விவாகரத்துக்கு இதுவே காரணம் என்றும் கூறப்படுகிறது. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புதிய வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘உலகை மாற்ற வேண்டும் என்று நான் விரும்பினால் முதலில் என்னை நானே மாற்றிக்கொள்ள வேண்டும். எனது படுக்கையை நான் உருவாக்க வேண்டும். அலமாரியை தூசு தட்ட வேண்டும். படுக்கையில் மதியம் வரை படுக்க கூடாது என்ற முடிவை எடுக்க வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இது ஆங்கில பாடல் வரிகளாகும். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விவாகரத்து பிரிவால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்- நடிகை சமந்தா உருக்கம்
நடிகை சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி தெரிவித்தார்.
2. சிக்கிமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.4 ஆக பதிவு
சிக்கிமில் ரிக்டரில் 5.4 ஆக பதிவான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
3. கவர்ச்சியாக ஆடுவதற்கு ரூ.2 கோடி சம்பளம்
கணவரை விட்டு பிரிந்த சமந்தா இப்போது தனிமையில் இருக்கிறார். அவரை ஒரு தெலுங்கு படத்தில், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடவைக்க பேச்சுவார்த்தை நடந்தது.
4. அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு
அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. காபூல் நகரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.