சினிமா செய்திகள்

கமலின் இந்தியன் 2 கைவிடப்படுகிறதா? + "||" + Is Kamal's Indian 2 being dropped?

கமலின் இந்தியன் 2 கைவிடப்படுகிறதா?

கமலின் இந்தியன் 2 கைவிடப்படுகிறதா?
விபத்தினால் நிறுத்தி வைத்த கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
விபத்தினால் நிறுத்தி வைத்த கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க சென்றுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்க தடை விதிக்கும்படி பட நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. பின்னர் ஷங்கருக்கும், இந்தியன் 2 பட தயாரிப்பு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டுள்ளது என்றும், தெலுங்கு படத்தை முடித்து விட்டு இந்தியன் 2 படப்பிடிப்பை ஷங்கர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டது. கமல்ஹாசனும் விக்ரம் படப்பிடிப்பு மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பிஸியாகி உள்ளார். இந்த நிலையில் இந்தியன் 2 படத்துக்கு மீதி உள்ள காட்சிகளை படமாக்க செலவாகும் புதிய பட்ஜெட் விவரங்களை தயாரிப்பு தரப்பிடம் ஷங்கர் தெரிவித்ததாகவும், அதை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு தரப்பு குறிப்பிட்ட காலத்துக்குள் படப்பிடிப்பை முடிக்கும்படி ஒப்பந்தம் போட்டு கையெழுத்து போடும்படி ஷங்கரிடம் கேட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் ஷங்கர் இதுவரை கையெழுத்து போடவில்லை என்றும், இதனால் இந்தியன் 2 படத்தை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது இணைய தளத்தில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை. இந்தியன் 2 படம் கைவிடப்படவில்லை என்று மறுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது
கைவிடப்படும் என்பது வதந்தி: கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.
2. நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடி
நடப்பு நிதி ஆண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடியாக உள்ளது.