சினிமா செய்திகள்

கணவரை சமந்தா பிரிய 5 காரணங்கள் + "||" + 5 reasons why Samantha broke up with her husband

கணவரை சமந்தா பிரிய 5 காரணங்கள்

கணவரை சமந்தா பிரிய 5 காரணங்கள்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.
குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. 

இதனால் சமந்தாவின் கதை தேர்விலும், அவர் யாருடன் நடிக்க வேண்டும் என்பதிலும் கணவர் குடும்பத்தினர் தலையிட்டு உள்ளனர். இது சமந்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். சமந்தா விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும், சமந்தாவும் நண்பர்களாக பழகியதும் நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். நாகசைதன்யா தன்னுடன் நடித்த 2 நடிகைகளுடன் நெருக்கமாக பழகியதாவும், அந்த நடிகைகளிடம் பேசக்கூடாது என்று சமந்தா கூறியதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக வளர்ந்தது, நாகசைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை சமந்தாவை விமர்சித்தேனா? சித்தார்த் விளக்கம்
எனது வாழ்க்கையில் நடந்த விஷயம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தேன் என்று சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார்.
2. ‘தி பேமிலிமேன்-2’ வெப் தொடரில் பயங்கரவாதியாக நடித்தது ஏன்? - நடிகை சமந்தா பரபரப்பு தகவல்
‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடரில் பயங்கரவாதியாக நடித்தது ஏன்? என்பது பற்றி நடிகை சமந்தா பரபரப்பான தகவல்களை கூறினார்.