வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்


வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2021 5:23 PM GMT (Updated: 2021-10-07T22:53:26+05:30)

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2-ம் பாகம் வருமா? சிவகார்த்திகேயன் விளக்கம்.

தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. ரஜினிகாந்தின் எந்திரன் 2-ம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன.

சூர்யா நடித்த சிங்கம் படம் 3 பாகங்களாக வெளியானது. சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 3-ம் பாகம் தயாராகி திரைக்கு வர உள்ளது. கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2, லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படங்களும் தயாராகி வருகின்றன.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா நடித்து வெற்றி பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது. இதற்கு பதில் அளித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடந்தது. என்னை பொறுத்தவரை அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது. ரெமோ படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் இன்னொரு படம் எடுக்கலாம்” என்றார்.

Next Story