தெலுங்கில் வளரும் சமுத்திரக்கனி


தெலுங்கில் வளரும் சமுத்திரக்கனி
x
தினத்தந்தி 7 Oct 2021 10:02 PM GMT (Updated: 2021-10-08T03:32:22+05:30)

நாடோடிகள் படம் மூலம் டைரக்டராக பிரபலமான சமுத்திரக்கனி தற்போது அதிக படங்கள் கைவசம் வைத்து நடிக்கும் முக்கிய நடிகராக மாறி உள்ளார்.

விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிவதுபோல், சமுத்திரக்கனியும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வளர்கிறார்.

அல்லு அர்ஜுனுடன் அலுவைகுண்ட புரம்லோ, ரவிதேஜாவின் கிராக் ஆகிய தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டி ஆந்திர ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார். ஆகாஷவாணி தெலுங்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் தயாராகும் ஆர்.ஆர்.ஆர்., மகேஷ்பாபுவுடன் சர்காரிவாரு பாட்டா, பவன் கல்யாணுடன் பீமல நாயக் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

தமிழில் சசிகுமார், ஜோதிகா ஆகியோருடன் உடன்பிறப்பே படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். விநோதய சித்தம் என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கி உள்ளார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓ.டி.டி.யில் வர உள்ளன.


Next Story