சினிமா செய்திகள்

ஜீவனாம்சமாக சமந்தா ரூ.6 கோடி வீட்டை வாங்கினாரா? + "||" + Did Samantha buy a house for Rs 6 crore as alimony?

ஜீவனாம்சமாக சமந்தா ரூ.6 கோடி வீட்டை வாங்கினாரா?

ஜீவனாம்சமாக சமந்தா ரூ.6 கோடி வீட்டை வாங்கினாரா?
காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தாவும், நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது விவாகரத்துக்கு காரணம் என்று தெலுங்கு பட உலகினர் கிசுகிசுக்கின்றனர்.
சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாகசைதன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி கொடுக்க முன்வந்ததாகவும், நான் நன்றாகவே சம்பாதிக்கிறேன் எனக்கு பணம் தேவை இல்லை என்று சொல்லி அதை வாங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் ஒரு சொகுசு பங்களா வீட்டை நாகசைதன்யாவிடம் இருந்து சமந்தா வாங்கி இருப்பதாகவும் அந்த வீட்டின் விலை ரூ.6 கோடி என்றும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. திருமணம் ஆனதும் சமந்தாவும், நாகசைதன்யாவும் ஐதராபாத்தில் சொந்தமாக பங்களா வீடு வாங்கி குடியேறினார்கள். அந்த வீட்டுக்கு அதிக செலவு செய்து உள் அலங்கார வேலைப்பாடுகளும் செய்தனர்.

விவாகரத்து அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அந்த வீட்டில் இருந்து நாகசைதன்யா வெளியே வந்து விட்டார். சமந்தா தற்போது அந்த வீட்டில்தான் குடியிருக்கிறார். இந்த வீட்டை ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு நாகசைதன்யா கொடுத்துவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக தெலுங்கு இணைய தளங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. வீட்டில் இரண்டு நாய்குட்டிகள் வளர்த்தனர். அதையும் ஆளுக்கு ஒன்றாக பிரித்து எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகர் படத்தில் குத்தாட்டம் போடும் சமந்தா
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2. ‘நான் ஒரு போராளி’ -நடிகை சமந்தா
கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த சமந்தா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.
3. அஜித் பட நடிகை மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா?
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
5. கணவரைபிரிந்ததால் மீண்டும் தீவிரமாக நடிக்கும் சமந்தா
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.