சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு + "||" + The 2nd song of the movie 'Annatha' starring Rajinikanth will be released tomorrow

ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் 2வது பாடல் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர்  சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இதன் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் கடந்த 4ந்தேதி மாலை வெளியானது.

டி.இமான் இசையில் கவிஞர் விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது

இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  மேலும், படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது என படக்குழு தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன?
அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு முன்கூட்டியே ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
2. இந்திய தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? முழு பட்டியல் வெளியீடு
இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களுக்கு எந்தெந்த நாடுகள் அங்கீகாரம்? வழங்கும் என்ற முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
3. மேற்கு வங்காளம்: 9-12 வரையிலான மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் வகுப்புகள்... விவரம் வெளியீடு
மேற்கு வங்காளத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்களும், 9, 11ம் வகுப்புகளுக்கு வேறொரு 2 நாட்களும் என வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
4. மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு
தமிழக அரசு மயான பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது.
5. 9 மாவட்டங்களுக்கான நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் எல்லை மறுவரையறை அரசிதழ் வெளியீடு
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் வார்டு எல்லை மறுவரையறை செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.