சினிமா செய்திகள்

கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா + "||" + Samantha breaks silence after split with Naga Chaitanya, reacts to cheating, abortion rumours

கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா

கருக்கலைப்பு வதந்திகள் எதுவும் என்னை பாதிக்காது - நடிகை சமந்தா
விவாகரத்தை தொடர்ந்து தன்னை சுற்றும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதில் அளித்து உள்ளார்.
சென்னை

நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார்.இவர்களது விவாகரத்து குறித்து பல்வேறு வதந்திகள், யூகங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது.

குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக வளர்ந்தது, நாகசைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் வதந்திகள் பரவின 

இந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது சமந்தா  தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

ஆழ்ந்த பச்சாதாபம், அக்கறை மற்றும் பொய்யான கதைகள் மற்றும் பரப்பப்படும் வதந்திகளுக்கு  எதிராக என்னை பாதுகாத்த அனைவருக்கும் நன்றி.   எனக்கு மற்றொருவருடன் தொடர்பு இருந்தது, நான் குழந்தை பெற மறுப்பு தெரிவித்தேன், நான் ஒரு சந்தர்ப்பவாதி,   மற்றும் கருவை கலைத்தேன் என வதந்திகள் வந்தன.

விவாகரத்து மிகுந்த வலியை அளித்துள்ளது அதிலிருந்து மீள்வதற்கு எனக்கு அவகாசம் அளிக்க வேண்டும்.இத்தகைய தாக்குதல்களில் இருந்து தான் தன்னை பாதுகாத்துக் கொள்வேன் என்றும் நான் உடைந்து விட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
2. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்
3. ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
4. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
5. "டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.