சினிமா செய்திகள்

போதைப்பொருள் வழக்கில் கைதானவரை ஆதரிப்பதா? ஹிருத்திக் ரோஷனை கண்டித்த கங்கனா + "||" + After Hrithik Roshan's post, Kangana Ranaut reacts to Aryan Khan's arrest in drugs case

போதைப்பொருள் வழக்கில் கைதானவரை ஆதரிப்பதா? ஹிருத்திக் ரோஷனை கண்டித்த கங்கனா

போதைப்பொருள் வழக்கில் கைதானவரை ஆதரிப்பதா? ஹிருத்திக் ரோஷனை கண்டித்த கங்கனா
போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், ‘‘வாழ்க்கை பிரச்சினைகளை தரக்கூடியது. கடவுள் வலிமையானவர்களுக்கு சிக்கல்களை கொடுப்பார். உனக்குள் இருக்கும் நாயகனை வெளியே கொண்டு வர வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிரச்சினை மூலம் நீ முதிர்ச்சி அடைவாய். உன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை அனுபவங்களாக ஏற்றுக்கொள். உனக்கு சிறப்பான காலம் காத்து இருக்கிறது. அமைதியாக இருந்து பிரச்சினைகளை கடந்து வெற்றி பெறுவாய்” என்று கூறியுள்ளார்.

ஆர்யன் கானை ஆதரித்த ஹிருத்திக் ரோஷனை நடிகை கங்கனா ரணாவத் கண்டித்துள்ளார். வலைத்தளத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், ‘‘அனைத்து மாபியா பப்புகளும், ஆர்யன் கானை பாதுகாக்க வந்துவிட்டனர். தவறு செய்து இருக்கிறார். செய்த தவறில் திருந்தி பலர் நல்ல இடத்துக்கு முன்னேறி சென்றுள்ளனர். இந்த சம்பவம் ஆர்யன் கானுக்கு புதிய கோணத்தை காட்டி இருக்கும். ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை பற்றி கிசுகிசுக்கள் பேசுவது தவறு. அதை விட தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதாக கூறிக்கொண்டு அவர்கள் தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது கிரிமினல் குற்றம்” என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கைதான ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
2. பெங்களூருவில் ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது
பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரளா, மணிப்பூரை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. சீதா வேடத்தில் கரீனாவுக்கு பதில் கங்கனா
ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளது.
4. தியேட்டர்களை திறக்காத அரசை சாடிய கங்கனா
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது.
5. போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்
போதைப்பொருள் வழக்கு: ரகுல் பிரீத்சிங், சார்மி, ராணாவுக்கு சம்மன்.