சினிமா செய்திகள்

சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன் + "||" + Drug party on a luxury cruise ship; The filmmaker was summoned to appear in person

சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன்

சொகுசு கப்பலில் போதை விருந்து; திரைப்பட தயாரிப்பாளர் நேரில் ஆஜராக சம்மன்
கோவா சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
மும்பை,

மராட்டிய  மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரண பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், ஆர்யன் கான், அர்பாஸ் சேத் மெர்சன்ட் மற்றும் முன்முன் தமீச்சா உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை மும்பை எஸ்பிளனேடு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில், மும்பை பந்திரா பகுதியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனைகள் நடைபெற்று உள்ளன என போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கில், ஆர்யன் கானின் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், சனி மற்றும் ஞாயிறு அவர் காவலில் வைக்கப்படுவார்.  நைஜீரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட 18 பேர் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி நேரில் ஆஜராக போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் சம்மன் அனுப்பி உள்ளது.  அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலருடன் நேரடி தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.  கடந்த ஆண்டு, மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போதை பொருள் வினியோகித்த வழக்கிலும் கத்ரி மீது குற்றச்சாட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை
சிவசங்கர் பாபா வீட்டின் ரகசிய அறையில் சோதனை.
2. விபசாரம் நடப்பதாக புகார்: 151 ‘மசாஜ் கிளப்'புகளில் போலீசார் அதிரடி சோதனை
சென்னையில் 151 ‘மசாஜ் கிளப்’புகளில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
3. குரங்குகளை பிடித்து ‘கோவேக்சின்’ தடுப்பூசி சோதனை நடத்திய கதை: சுவாரசியமான தகவல்கள்
குரங்குகளை பிடித்து வந்து ‘கோவேக்சின்’ தடுப்பூசி சோதனை நடத்திய சுவாரசியமான தகவல்கள் குறித்து புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
4. ரூ.300 கோடி வரி ஏய்ப்பு: கால்நடை தீவன நிறுவனத்தில் ரூ.3¼ கோடி பறிமுதல்
தமிழகத்தில் கால்நடை தீவனங்கள், கோழி இறைச்சி உற்பத்தி செய்யும் நிறுவனம் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், ரூ.3¼ கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்து உள்ளது.
5. மாநில கூட்டுறவு வங்கி தலைவர் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவனின் வீடு உள்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.