'சாரல் சாரல் காற்றே ' அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது


சாரல் சாரல் காற்றே  அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது
x
தினத்தந்தி 9 Oct 2021 12:43 PM GMT (Updated: 9 Oct 2021 12:43 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர்  சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இதன் முதல் சிங்கிளான அண்ணாத்த அண்ணாத்த என்ற பாடல் கடந்த 4ந்தேதி  வெளியானது.

டி.இமான் இசையில் பாடலாசிரியர்  விவேகா எழுதியுள்ள இந்த பாடலை மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் 'சாரல் சாரல் காற்றே ' என்ற 2வது பாடல்  இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.


Next Story