கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது


கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது
x
தினத்தந்தி 10 Oct 2021 1:43 AM GMT (Updated: 2021-10-10T07:13:25+05:30)

கைவிடப்படும் என்பது வதந்தி: கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரானது. இதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது. இதையடுத்து, ‘இந்தியன்-2’ படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி விசாரித்தபோது, அது வெறும் வதந்தி என்று தெரியவந்தது. ‘இந்தியன்-2’ படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது என்றும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று அவர்கள் கூறினார்கள்.


Next Story