கிரிக்கெட்

டோனிக்கு தனுஷ் -லோகேஷ் கனகராஜ் பாராட்டு + "||" + Dhanush and Lokesh Kanagaraj compliment Dhony

டோனிக்கு தனுஷ் -லோகேஷ் கனகராஜ் பாராட்டு

டோனிக்கு தனுஷ் -லோகேஷ் கனகராஜ்  பாராட்டு
சிறப்பான பேட்டிங் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9வது முறையாக இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்ற கேப்டன் மகேந்திர சிங் டோனியை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனியை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளனர்.

ஐபிஎல் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது.

சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு வெள்ளத்தில் நனையத் தொடங்கினார் டோனி. இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் " 7 அவ்வளவு தான், அதுதான் டுவிட் என டோனியின் ஜெர்ஸி எண்ணை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். 
 
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு முறை சிங்கம் எப்போதுமே சிங்கம் என டோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தனுஷின் பாலிவுட் திரைப்படம்: வெளியானது டிரைலர்...!
படத்தின் டிரைலரில் நடிகர் தனுஷ் தமிழில் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
2. 'மாறன்' திரைப்படத்தின் ஆடியோ விரைவில் வெளியாகிறது
தனுஷ் நடிக்கும்'மாறன்'திரைப்படத்தின் புதிய அப்டேட் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
3. தனுஷின் மாறன் ஓடிடியில் வெளியாகிறதா?
மாறன் திரைப்படத்தின் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்க இருப்பதால் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும்.
4. தனுசின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் தெரிவித்து உள்ளார்.
5. அனிருத் பிறந்தநாள் - திரைப் பிரபலங்கள் வாழ்த்து
இசையமைப்பாளர் அனிருத் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.