சினிமா செய்திகள்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார் + "||" + Veteran actor Nedumudi Venu passes away

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
பிரபல நடிகர் நெடுமுடி வேணு தனது 73 வயதில் காலமானார்
திருவனந்தபுரம்

பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர், தமிழில், 'இந்தியன்', 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'சர்வம் தாளமயம்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்று உள்ளார்.

73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். 



தொடர்புடைய செய்திகள்

1. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.
2. படபிடிப்பில் காயம் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்ட நடிகை...!
மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்
3. ஆப்பிள் கலருக்கு மாறிய மைனா நந்தினி ...! அதன் ரகசியத்தை உடைக்கிறார்...!
மைனா நந்தினி கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியாக யூடியூப் சேனலை தொடங்கினார்.
4. துணிச்சல் தான்...!ஹாலிவுட் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் சமந்தா
நடிகை சமந்தா, தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது சினிமா செல்வாக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.
5. "டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் “டியூசன் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டார்" என தேவோலீனா கூறினார்.