சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய திரிஷா + "||" + Trisha speaks dubbing in her own voice in Ponniyin Selvan movie

பொன்னியின் செல்வன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய திரிஷா

பொன்னியின் செல்வன் படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசிய திரிஷா
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.
நடிகர்-நடிகைகள் டப்பிங் பேசும் பணியையும் தொடங்கி உள்ளனர். நடிகர்கள் ஜெயராம், நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் பகுதிகளுக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டனர். கார்த்தி டப்பிங் பேசி வருகிறார். இந்தநிலையில் நடிகை திரிஷாவும் டப்பிங் பேசும் பணியை தொடங்கி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார். 

முந்தைய பல படங்களுக்கு திரிஷாவுக்கு வேறு பெண் டப்பிங் கலைஞர்கள் பின்னணி குரல் கொடுத்தனர். மங்காத்தா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் திரிஷா சொந்த குரலில் பேசி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்திலும் திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார். இது வரலாற்று படம் என்பதால் தூய தமிழில் வசனத்தை பேசி இருக்கிறார். இதில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் விக்ரம், சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், லால், ரகுமான், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வன் படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. முதல் பாகத்தை அடுத்த வருடம் ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பொன்னியின் செல்வனில் நடித்து முடித்த கார்த்தி
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கினால் முடங்கிய படப்பிடிப்பை தளர்வுக்கு பிறகு மீண்டும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.
2. பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தை உறுதி செய்த கார்த்தி
இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம், ‘பொன்னியின் செல்வன்.’ மணிரத்னம் டைரக்டு செய்கிறார். பிரபு, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், திரிஷா உள்பட திரையுலகின் பல பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்கள்.
3. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குவிந்த முன்னணி நடிகர்கள்
கொரோனா ஊரடங்கு தளர்வில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.