சினிமா செய்திகள்

" ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் "மறைமுகமாக ஷாருக்கானை விமர்சித்த கங்கனா ரனாவத் + "||" + Kangana Ranaut reminds fans how Jackie Chan apologised after son's drugs scandal: 'Just saying'

" ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் "மறைமுகமாக ஷாருக்கானை விமர்சித்த கங்கனா ரனாவத்

" ஜாக்கி சான் மன்னிப்பு  கேட்டார் "மறைமுகமாக ஷாருக்கானை  விமர்சித்த கங்கனா ரனாவத்
மகனின் போதை பொருள் நடிகர் ஜாக்கி சான் மன்னிப்பு கேட்டார் என ஷாருக்கனை மறைமுகமாக சாடிய நடிகை கங்கனா ரனாவத்
மும்பை

மராட்டிய  மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அங்கு கப்பலில் சாதாரண பயணிகளை போல சென்று கண்காணித்த போது, தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.  இதனை தொடர்ந்து, 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவார்.

ஷாருக்கானின் மகனுக்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்களான திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், பூஜா பட் மற்றும் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், வழக்கமாக சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பும் நடிகை கங்கனா ரணாவத், இப்போது இந்த பிரச்சினையை வைத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டபோது பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். மகனின் செயலுக்கு நான் வெட்கப்படுகிறேன். இது எனது தோல்வி. இந்த விவகாரத்தில் அவரை பாதுக்காக்கும் செயலில் ஈடுபடமாட்டேன் என்று கூறியிருந்தார் என்பதை பதிவு செய்துள்ளார். #justsaying என்ற ஹேஷ்டேக்கில் இதை அவர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஷாருக்கானை பெயர் குறிப்பிடாமல் நடிகை கங்கனா விமர்சித்துள்ளார். கங்கனாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயிலிருந்து போதைப்பொருள் கடத்தல் - கினியா நாட்டு பெண் டெல்லியில் கைது
அவரது பைகளில் ரூ.72 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2. டெல்லி விமான நிலையத்தில் சிக்கிய 14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்: உகாண்டா பெண் கைது
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த உகாண்டா பெண் கைதுசெய்யப்பட்டார்.
3. ஷாருக்கான் –அட்லீ படத்தில் இணைந்த நயன்தாரா
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக நயன்தாராவே நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
4. பாலத்தில் தொங்கிய நிலையில் 9 உடல்கள் ;போதைக்கும்பலின் அட்டகாசம்
போதைப்பொருள் விற்பனை விவாரத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
5. 120 கிலோ போதைப்பொருள் பறிமுதல் :குஜராத் தீவிரவாத தடுப்புப் படை அதிரடி
கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3,000 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது