சினிமா செய்திகள்

பிரபல பட அதிபர் மரணம் + "||" + Death of famous film tycoon

பிரபல பட அதிபர் மரணம்

பிரபல பட அதிபர் மரணம்
மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணம் அடைந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேருவும் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்தார்.
மலையாள நடிகர் நெடுமுடி வேணு மரணம் அடைந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேருவும் நேற்று காலை மாரடைப்பால் உயிர் இழந்தார். இவர் கல்யாண் ராம் நாயகனாக நடித்த 118 படம் மூலம் தயாரிப்பாளரானார். கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா மற்றும் போலீஸ் வாரி ஹெச்சரிகா, 118, திம்மரசு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவரது தயாரிப்பில் அல்லரி நரேஷ் நடித்துள்ள சபகு நமஸ்காரம் படம் சமீபத்தில் வெளியானது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கி வினியோகம் செய்துள்ளார். நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றினார். மகேஷ் கொனேரு மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை ஏ.க்யூ.கான் மறைவு
பகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அப்துல் காதிர் கான் இன்று மரணம் அடைந்தார்.
2. பிரபல நடிகை மரணம்
பிரபல மலையாள நடிகை ஸ்ரீலட்சுமி. இவர் பல திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.
3. நடிகை நந்திதாவின் தந்தை திடீர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
தந்தையை இழந்து தவிக்கு நடிகை நந்திதாவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
4. பிரபல பின்னணி பாடகி மரணம்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
5. பிரபல நடிகர் மரணம்
பிரபல மலையாள நடிகர் படன்நயில். இவர் மேடை நாடகங்களில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீகிருஷ்ணபுரத்தே நக்சத்திரத்திலக்கும், ருதன்மரே சூக்‌சிக்குகா ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.